பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று - ஒரு பார்வை
இன்று 2.10.2022 காலை 9:15 மணி அளவில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று பார்க்கச் சென்றேன். செல்லும் வழியெல்லாம் பொன்னியின் செல்வன் கதையை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன். புதினத்தில் உள்ளதையும் திரையில் வருவதையும் ஒத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? திரையரங்கம் சென்று நான் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பொன்னியின் செல்வன் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது என்றால் அது அப்படத்திற்கும் பெருமை எனலாம் 😆. திரைப்படத்திற்கு முன் போடப்பட்ட விளம்பரப் படங்கள் என் பொறுமையை வெகுவாக சோதித்தனர். ஒவ்வொரு விளம்பர படத்திற்கு முன் போடப்படும் சென்சார் போர்டு சர்டிபிகேட் படத்திற்கு உள்ளதோ என்று பார்த்து ஏமாந்தேன்! ஒரு வழியாக UA சான்றிதழுடன் பொன்னியின் செல்வன் என்ற பெயர் பார்த்தவுடன் மயிர் கூர்செரிய நிமிர்ந்து அமர்ந்தேன். திரையில் குதிரைகள் ஓட ஓட எனது மனக்குதிரை ஏனோ திரையில் கண்டனவற்றை புதினத்தோடு ஒப்பிட ஆரம்பித்தது. திரைக்கதை ஓட்டத்திற்காக கதையில் சில இடைச் செருகல்கள் ஒட்டப்பட்டு இருந்தது. புத்தகத்தைப் படித்தவர்களுக்கு மணியம் ஓவியங்களாக ப...